Sunday 27 March 2011

ராதா கல்யாண மஹோத்ஸவம்

ராதா கல்யாண மஹோத்ஸவம்

கடந்த பிப்ரவரி மாதம் 4,5 மற்றும் 6 தேதிகளில் ஆஸ்தீக ஸமாஜத்தின் " ராதா கல்யாண மஹோத்ஸவம்" மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக 2010 அக்டோபர் தொடங்கி 13 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை மாநகரின் முக்கிய வீதிகளில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.





04-02-2011 - வெள்ளிக்கிழமை



4ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா சிறப்பாகத் தொடங்கியது. அன்று மாலை செங்கோட்டை ஸ்ரீ ஹரி பாகவதரின் அபங்க பஜன் நிகழ்ச்சி "ஆனந்த ரூபா ; ஆனந்த நாமா " என்ற பாடலுடன் தொடங்கியது. முதற் பாடலிலேயே அனைவரையும் " நாராயணா " என்ற நாமத்தின் மூலம் இறைபக்தியில் ஆழ்த்தினார்.

7.30 மணி முதல் 11.30 முதல் கோவை இடையர்பாளையம் V R G கல்யாண மண்டபத்தில் அபங்க மழை பொழிந்தது.

05-02-2011 - சனிக்கிழமை

காலை உள்ளூர் பாகவதர்களுடன் நிகழ்வு தொடங்கியது.

மாலை உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதரின் திவ்யநாம நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடை பெற்றது. பாகவதர் " நிம்மதி அடைந்தேன் " என்ற பாடல் மூலம் அனைவருக்கும் ஆத்ம நிம்மதியை அளித்தார். தீபப் பிரதட்ஷனம் மற்றும் டோலோத்ஸவத்துடன் இரவு நிகழ்வு முடிந்தது.

06-02-2011 - ஞாயிற்றுக்கிழமை


நிகழ்ச்சி காலை 6.30 மணிக்கு உஞ்சவ்ருத்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதரின் ராதா கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. "காஞ்சி மாநகர் போக வேண்டும்" என்ற பாடலின் மூலம் பாகவதர் அனைவரையும் காஞ்சி மாநகருக்கே அழைத்துக் கொண்டு போனார் என்பதில் ஐயமில்லை.


இந்த மூன்று நாட்களும் தினமும் சுமார் 1500 முதல் 1800 பக்தர்கள் வரை இந்த ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் கலந்து கொண்டு பகவான் அருளைப் பெற்றனர்.




இந்த விழாவின் அனைத்து நாட்களின் அனைத்து வேளையும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மிக சிறப்பான உணவு பகவானின் அருட்பிரசாதமாக வழங்கபட்டது.

ராதே கிருஷ்ணா!

நிர்வாகிகள்
ஆஸ்தீக சமாஜம், கோயமுத்தூர்

Saturday 26 March 2011

Naama Prachara Vaibhvam - Tamil Inivitation


நாமப் ப்ரச்சார வைபவம்

ராதே கிருஷ்ணா!

கோவை ஆஸ்தீக ஸமாஜத்தின் " நாமப் ப்ரச்சார வைபவம் " சிறப்பு நிகழ்ச்சி 30-04-2011 முதல் 08-05-2011 வரை கோவை இடையர்பாளையம் பஸ் நிறுத்ததில் உள்ள V R G திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அனைவரும் இந்த நாமப் ப்ரச்சார வைபவத்தில் கலந்து கொண்டு ஆண்டவனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.

நிர்வாகிகள்
ஆஸ்தீக ஸமாஜம்
கோயமுத்தூர்